புலவர் ஆ.பழநி அவர்கள் பெற்ற பரிசுகள் மற்றும் விருதுகள்:
- 1968 சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் திருவள்ளுவர் ஈராயிரமாவது ஆண்டினை ஒட்டி நடத்திய திருக்குறள் புத்துரைப் போட்டியில் பரிசு
- 1973 சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நடத்திய நாடகப் போட்டியில் முதல் பரிசு (அனிச்ச அடி நாடகம்)
- தமிழகத் தமிழாசிரியர் கழகம் நடத்திய செய்யுள் நாடகப் போட்டியில் மூன்றாம் பரிசு (அன்னிமகள் நாடகம்)
- 1974 நெல்லை தனித்தமிழ் இயக்கக் கழகத்தின் ‘பாவலர் மணி’ விருது
- 1980 தவத்திரு குன்றக்குடி அடிகளார் வழங்கிய ‘கவிஞர்கோ’ பட்டம்
- 1991 தமிழக அரசு பாவேந்தர் நூற்றாண்டு விழாவில் ‘பாவேந்தர் விருது’
- 1997 கோவில்பட்டித் திருவள்ளுவர் கழகம் வழங்கிய ‘திருவள்ளுவர் விருது’
- 1999 காரைக்குடி சுழற்குழு வழங்கிய ‘புலவர் மாமணி’ விருது
- 2002 பாரதிதாசன் தமிழ்ப்பேரவையின் ‘தமிழ்நெறிச் செம்மல்’ விருது
- 2007 மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் ‘தமிழ்ப்பேரவைச் செம்மல்’ பட்டம், பொற்பதக்கம், மற்றும் பொற்கிழி.
- 2018 ‘கம்பரின் மறுபக்கம்’ நூலை பாராட்டி தஞ்சை பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழர் தலைவர் கீ.வீரமணி அவர்களால் பொற்கிழி.
- 2025 தமிழக அரசு புலவர் ஆ.பழநி அவர்களின் 18 நூல்களையும் அரசுடைமையாக்கியது.