கோவலன் வீழ்ச்சியும் இளங்கோ மாட்சியும்

பாதியிலே முடிய போகின்ற கதை. வெட்டுவதற்கென்றே வளர்க்கப்பட்ட ஆடு. இந்த உணர்வோடு இளங்கோவடிகள் கோவலனை படிப்பதனால், உத்திகளின் துணைகொண்டு, அவன் உயிரின் கதறலை, உணர்வின் இதறலை, வெளிப்படுத்தி நிற்பதுதான்…

கோவிலின் வீழ்ச்சியும், இளங்கோ மாட்சியும்.

– பாவலர்மணி. ஆ. பழம்நீ

Click here to download

 

கானல் வரியா? கண்ணீர் வரியா?

கோவலன் உள்ளத்தில் வேறொருத்தி குடியிருப்பதை அறிந்து, உருகிய உள்ளத்தோடும், கண்ணில் பெருகிய வெள்ளத்தோடும், மாதவி கதறி அழுத கவிதைகளின் விளக்கந்தான்…

கானல் வரியா ? கண்ணீர் வரியா ?

– பாவலர்மணி ஆ.பழம்நீ

Click here to download

பண்டித மணியின் நாடகத்தமிழ்

பண்டித மணியின் நாடகத்தமிழ் (1983) – திறன்நூல்

மிருத்சகடிகம் – வடமொழி நாடகம்
மண்ணியில் சிறுதேர் – இதன் மொழிபெயர்ப்பு
மொழிபெயர்த்தவர் பண்டிதமணியார்
புரட்சி, புதுமையான் திரட்சி இந்நாடகம்
காவிய நுட்பங்களின் கடல் என்று கூறலாம்
சுந்தர மன்னனின் நேர்த்தியான படைப்பு
மன்னனின் மனவிசாலம் நம்மை மயக்குகின்றது.

-பாவலர்மணி. ஆ.பழநி

“அனிச்ச அடி” தமிழ் அன்னைக்கு ஒரு சிற்றாடை என்றால், இந்நூல் தமிழ் தாயின் காஞ்சிப்பட்டு.

– டாக்டர். வா.சுப.மாணிக்கம்

புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய [Click here to download]

அன்னிமகள்

  • அன்னிமகள்” – நாடகம் : கதை சுருக்கம்:

உளுத்தம் பயிரை அழித்தது காலை- இதற்காக
ஒறுத்தனர் கோசர்; பறித்தனர் கண்ணை;
அண்ணனை இழந்த அண்ணியின் பெண் மகள்
சூளுரை மொழிந்தாள்;
வாளுறை நீக்கினான் வடிவாள் திதியன்;
மூண்ட போரில் முடிந்தனர் கோசர்;
இனத்தின் ஒற்றுமை இது எனக் காட்டும்
மனங்கவர் நாடகக் காப்பியம் இதுதான்.

பாவலர்மணி. ஆ. பழம்நீ

பதிவிறக்கம் செய்ய [Click here to download]

அனிச்ச அடி

  • அனிச்ச அடி” (செய்யுள் நாடகம்) – கதை சுருக்கம் :

மாவடுவைத் தின்றால் ஒரு மங்கை;
இதற்கு மரணத்தைப் பரிசாகத் தந்தான் ஒருவன்.
அவன் துளு நாட்டு மன்னன்; பெயர் நன்னன்.
கோசர்கள் பின்னிய சூழ்ச்சி வலை,
மாவையும் அழித்தது; மன்னனையும் அழித்தது.

கவிதை நாடக உலகத்திற்குப் புதுவரவு;
காவியம் பயில்வதற்கு இது இனிய உறவு.

– பாவலர்மணி. ஆ. பழம்நீ 

  • கதைப் போக்காலும் காப்பிய வளர்ச்சியாலும் பெண்மையைச் சுட்டும் அனிச்சப் படிமம் உருவாயுளது. அனிச்சத்தைப் பெண்மையோடு ஒப்பிட்ட திருக்குறளுக்குக் காப்பிய வடிவத்தில் ஒரு விளக்கவுரை கிடைத்திருக்கிறது.

– டாக்டர். தமிழண்ணல்

  • சைவ சித்தாந்த பதிப்பகம் நடத்திய போட்டியில் மாநில அளவில்  முதல் பரிசுப் பெற்று, கலைஞர் கருணாநிதி அவர்களால் பொற்கிழியும் வழங்கப்பட்டது.

 

 

 

 

 

 

 

  • அனிச்ச அடி” நாடகம் கீழ்கண்ட கல்லூரிகளில் MA. தமிழ்க்கு பாட நூலாக உள்ளது :
    1. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், இலங்கை
    2. கோழிக்கோடு பல்கலைக்கழகம், கேரளா
    3. ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம், திருப்பதி

புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய (Click here to download)

Preview